Sunday, October 25, 2009

வள்ளலாரின் பாடல்கள்

பாடல்-1
வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
மயில் குயிலாச்சுதடி
துள்ளலைவிட்டுத் தொடங்கினேன் மன்றாடும்
வள்ளலைக் கண்டேனடி
சாதி சமய சரக்கை விட்டேன் அருட்
சோதியைக் கண்டேனடி
பொய்யை ஒழுத்துப் புறப்பட்டேன் மன்றாடும்
ஐயரைக் கண்டேனடி
======================================================
பாடல்-2
அருள்ஜோதி தெய்வம் என்னை ஆண்டு கொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைகள் எலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம் உயர்நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணிய நான் எண்ணிவாறெனக்கருளும் தெய்வம்
தெருப்பாடல் உவந்தெனையும்சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
=======================================================
பாடல்-3
காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே
களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறுங்கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எலாம் தருமச்
சாலையிலே ஒரு பகலில் தந்த தனிப்பதியே
சமரச சன்மார்க்க சங்கத் தலை அமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்தாடும்
மாநடத் தென் அரசே என்மாலையும் ஏற்றருளே
=======================================================
பாடல்-4
சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்த அலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே
நீதியிலே சன்மார்க்க நிலை தனிலே ஞான
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர் அவர் தாமே
வீதியிலே அருட்ஜோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே.
=======================================================
பாடல்-5
ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்பு செயல்வேண்டும்.
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நினதருட்புகழை இயம்பி யிடல் வேண்டும்.
செப்பாதமேனிலைமேல் சுத்த சிவமார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவ நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே!
=======================================================

No comments:

Post a Comment