Sunday, November 1, 2009

எனக்குப்பிடித்த பாடல்கள்

பாடல் 1

படம்: அவன் ஒரு சரித்திரம்
பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசிலா
பாடல் வரிகள்: கவிஞர். கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
நடிகர்கள்: சிவாஜி கணேசன், காஞ்சனா

வணக்கம்! வணக்கம்! வணக்கம்!

வணக்கம் பலமுறை சொன்னேன்
சபையினர் முன்னே தமிழ் மகள் கண்ணே
கொண்ட பண்பாடு மறவாத பெண்மை-இந்த
தென்னாட்டின் வழி காக்கும் மென்மை (வணக்கம்)

மேலை நாடெங்கும் விஞ்ஞானக் கலைகள்
அங்கு விளையாடும் அலங்கார நிலைகள்
அங்கு பெண்ணில்லை பேசும் கண்ணில்லை
என்ன அலங்கோலமோ என்ன புது மோகமோ (வணக்கம்)

வண்ணத் திலகங்கள் ஒளி வீசும் முகங்கள்
எங்கள் திருநாட்டுக் குல மாதர் நலன்கள்
அன்பு தெய்வங்கள் இன்பச் செல்வங்கள்
ஆடும் கலையாகுமோ பாடும் தமிழாகுமோ (வணக்கம்)

அன்னை தாய்ப் பாலை பிள்ளைக்கு கொடுத்து
அன்பு தாலாட்டுப் பாட்டொன்று படித்து
காணும் சுகம் என்ன தேடும் சுகம் என்ன
சொல்ல மொழியில்லையே பேச விலையில்லையே (வணக்கம்)

பாடல் 2

படம்: அவன்தான் மனிதன்
பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசிலா
பாடல் வரிகள்: கவிஞர். கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
நடிகர்கள்: சிவாஜி கணேசன், மஞ்சுளா

அன்பு நடமாடும் கலைக் கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே (அன்பு)

மாதவி கொடிப் பூவின் இதழோரமே
மயக்கும் மதுச்சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே
மன்னர் குலத் தங்கமே
பச்சை மலைத் தோட்ட மணியாரமே
பாடும் பது ராகமே (அன்பு)

வெள்ளலைக் கடலாடும் பொன்னோடமே
விளக்கின் ஒழி வெள்ளமே
செல்லும் இடம் தோறும் புகழ் சேர்க்கும் மனமே
தென்னர் குல மன்னனே
இன்று கவி பாடும் என் செல்வமே
என்றும் என் தெய்வமே (அன்பு)


மாநிலம் எல்லாமும் நம் இல்லமே
மக்கள் நம் சொந்தமே
காணும் நிலம் எங்கும் கவி பாடும் மனமே
உலகம் நமதாகுமே
அன்று கவி வேந்தன் சொல் வண்ணமே
யாவும் உறவாகுமே (அன்பு)

No comments:

Post a Comment